BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
புரியதா காரணம்..! பிரபல இளம் சீரியல் நடிகை திடீர் தற்கொலை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சமீபகாலமாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்துவருவது அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பாலிவுட்டில் சீரியலில் நடித்து பிரபலமானவர் சேஜல் ஷர்மா. இவர் நேற்று தனது வீட்டில் திடீர் தற்கொலை செய்துள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாடலான சேஜல் ஷர்மா, சினிமாவில் நடிப்பதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு மும்பை வந்து தனது தோழியுடன் தங்கி நடித்து வந்துள்ளார்.

ஆரம்பத்தில் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சேஜல், "தில் தோ ஹேப்பி ஹை ஜி" உட்பட சில டிவி தொடர்களில் நடித்தார். இதன் மூலம் பிரபலமாகி வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை அவரது அறையில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அவரது தோழி சேஜலின் அறை கதவைத் திறந்ததும் இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.