சினிமா

தொடரும் துயரம்.! கொரோனாவிற்கு பலியான பிரபல இளம் இயக்குனர்.! அதிர்ச்சியில் திரையுலகம் மற்றும் ரசிகர்கள்.!

Summary:

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் பாதிப்

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாலும் கொரோனா தொற்றால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். ஏராளமான உயிரிழப்புகளும் நேர்ந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வருகிறது.

அதற்கு சாமானிய மக்கள் முதல் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழக்கும் துயரமும் நேர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 36 வயது நிறைந்த பிரபல கன்னட இளம் இயக்குனர் நவீன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ஒன் டே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது மறைவு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement