சினிமா

பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!!

Summary:

பிரபல நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!!

கன்னடத் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் சத்யஜித் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென காலமானார்.

கன்னட திரையுலகில் சுமார் 650 படங்களுக்கு மேல் நடித்து பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சத்யஜித். இவரது உண்மையான பெயர் சையது நிஜாமுதீன். இவர் தனது நடிப்பால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளார்.

மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆரம்பத்தில் குணசித்திர வேடங்களில் நடித்த அவர் பின்னர் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார். இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் பல வருடங்களாக சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி தனது 72 வயதில் தற்போது காலமானார். இவரது மறைவு செய்தி கேட்ட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


Advertisement