கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு ஜிகர்தண்டா 2... இயக்குனர் சங்கர் நெகிழ்ச்சி பதிவு!!

கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு ஜிகர்தண்டா 2... இயக்குனர் சங்கர் நெகிழ்ச்சி பதிவு!!


Famous director Sankar speak about jigarthanda movie

ஜிகர்தண்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 ஆண்டு கழித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா 2 . தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுதற்குரியது. ஜிகர்தண்டா 2 படம் குறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல இயக்குனரான சங்கர் ஜிகர்தண்டா 2 படம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். திரைக்கதை மற்றும் இயக்கத்தை பொருத்தவரை கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு தான் ஜிகர்தண்டா 2. சினிமாவுக்கு மரியாதை. எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி - கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு. சந்தோஷ் நாராயணனின் அதிரடியான பின்னணி இசை என்று குறிப்பிட்டுள்ளார்.