ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விஜய் நடித்த சிறந்த பொழுதுபோக்கு திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகம்!

ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விஜய் நடித்த சிறந்த பொழுதுபோக்கு திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகம்!



famous director passed away

விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் சென்னையில் நேற்று காலமானார். சென்னை தாம்பரத்தில் வசித்து வந்த பாபுசிவன், கடந்த சில நாட்களாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்புக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

மறைந்த இயக்குனர் பாபு சிவனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். பிரபல இயக்குநர் தரணியின் உதவியாளராக இருந்தவர் பாபுசிவன். விஜய் நடித்த "குருவி" திரைப்படத்தின் வசனங்களை பாபுசிவன் எழுதியிருந்தார். 2009 ஆம் ஆண்டு விஜய் நடித்த "வேட்டைக்காரன்" திரைப்படத்தை இயக்கினார் பாபுசிவன்.

babu sivan

இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக "வேட்டைக்காரன்" விளங்குகிறது. இயக்குனர் பாபு சிவனின் மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.