பிரபல நடிகை திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!! ரசிகர்கள் இரங்கல்!!

பிரபல நடிகை திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!! ரசிகர்கள் இரங்கல்!!



famous-bollywood-actress-manju-singh-dead

இந்தி தொலைக்காட்சியில் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் மஞ்சு சிங். இவர் பல நிகழ்ச்சிகளை தயாரித்தும் உள்ளார். மஞ்சு சிங் தனது நிகழ்ச்சிகளின் மூலம் சமூக குறித்த பல பிரச்சினைகளைப் பற்றி பேசியுள்ளார். 

மேலும் மஞ்சு சிங்  khel khilone என்னும் குழந்தைகளின் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் குழந்தைகள் ரசிகர்கள் அவரை திதி என செல்லமாக அழைத்தனர். மேலும் மஞ்சு சிங் கோல்மால் என்னும் திரைப்படத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானார்.

Manju singh

இந்த நிலையில் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அதனை அவரது மூத்த மகளான சுபர்னா உறுதி செய்துள்ளார். மேலும் நியூயார்க்கில் உள்ள அவரது பேத்திக்காக குடும்பத்தினர் காத்திருப்பதாகவும், இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மஞ்சு சிங் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.