கவர்ச்சி கடலில் குதித்து ரசிகர்களை தெறிக்கவிட்ட பிரபல தொகுப்பாளினி, வைரலாகும் புகைப்படம்.!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமானவர் ரம்யா. இவர்
சேனல்கள் மட்டுமின்றி, சினிமா விழாக்களிலும் தொகுத்து வழங்கி வந்தார்.
மேலும் ரம்யா சின்னத்திரையில் மட்டுமின்றி ‘மொழி’, ‘மங்காத்தா’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மாஸ்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
குறிப்பாக, ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்த பிறகு சினிமாவில் பெரியஅளவில்
வாய்ப்புகள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
சினிமா சரியாக கைகொடுக்கவில்லை.
அதனால், தற்போது சினிமாவை ஓரங்கட்டி விட்டு, சின்னத்திரையில் முழுவீச்சில் இறங்கி விட்டார் ரம்யா. இனிமேல் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து கொண்டே, சீரியல்களில் வெயிட்டான கேரக்டரில் நடிக்க முடிவெடுத்துள்ளார் நடிகை ரம்யா.
மேலும் நடிப்பு தவிர பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்று பதங்கங்களை வென்று வருகிறார் ரம்யா.
இந்நிலையில், இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதற்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.