BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அடக்கடவுளே.. பிரபல அஜித் பட நடிகர் கல்லீரல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதி..! ரசிகர்கள் பேரதிர்ச்சி..!!
கோலிவுட்டில் தல அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பட்டையை கிளப்பிய திரைப்படம் வீரம். இப்படத்தில் அஜித்தின் தம்பி கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் பாலா. இவர் அன்பு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக நடிகர் பாலா கொச்சியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.