அடேங்கப்பா.. முத்தக்காட்சிக்காக 80 டேக்.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் குறித்து மனம்திறந்த பிரபல நடிகர்..!!

அடேங்கப்பா.. முத்தக்காட்சிக்காக 80 டேக்.. படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் குறித்து மனம்திறந்த பிரபல நடிகர்..!!


famous actor takes 80 take for kiss scene

ஒரேயொரு முத்தகாட்சியை 79 முறை சிரித்தே சொதப்பிய நடிகர், 80-வது முறையில் சரியாக நடித்து கொடுத்துள்ளார்.

டிக்கெட் டூ பாரடைஸ் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி நடித்து வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளராகவும் அவர் பணியாற்றுகிறார். இப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 

படத்தில் ஜார்ஜ் குளூனியின் ஜோடியாக ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட் நடித்துள்ளார். அமெரிக்காவில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு இருவரும் சேர்ந்து பணியாற்றி வருகிறர்கள். 

அப்போது பேட்டியொன்றில், "படத்தின் முத்தக்காட்சியை படமாக்கிய அனுபவம் குறித்து ஜார்ஜ் குளூனி மனம்திறந்து பேசினார். அதாவது, முத்தக்காட்சியை படமாக்க 80 டேக்குகள் எடுத்துக்கொண்டேன் என்று தெரிவித்தார். 79 டேக்கை சிரித்து சொதப்பி 80 வது காட்சியில் சரியாக நடித்துவிட்டோம்" என்று தெரிவித்தார்.