முன்னணி நடிகரா இருந்தாலும் அவரும் தல ரசிகன் தான்! முதல் நாளே மனைவியுடன் சென்று படத்தை பார்த்த முன்னணி நடிகர்!

முன்னணி நடிகரா இருந்தாலும் அவரும் தல ரசிகன் தான்! முதல் நாளே மனைவியுடன் சென்று படத்தை பார்த்த முன்னணி நடிகர்!


Famous actor saw nerkonda parvai in first day

திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை முன்னணி நடிகரான சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் முதல் நாளே பார்த்துள்ளனர்.

பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர்தற்போது சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். ஏற்கனவே இவர் நடித்து வெளியான விசுவாஸம் படம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கவர்ந்தது. இந்தநிலையில் முக்கிய பிரச்சனையை பேசும் படமாக அவர் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் தான் நேர்கொண்ட பார்வை. 

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் H.வினோத்.

Thala ajith

நேர்கொண்ட பார்வை நேற்று வெளியாகி உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அஜித்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரை பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். 

இந்தநிலையில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் படத்தை முதல் நாளே பார்த்துள்ளனர். இப்படம் அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துள்ளதாம். படம் பார்த்து சந்தோஷமடைந்த சூர்யா, இயக்குனர் வினோத் மற்றும் நடிகர் அஜித்திற்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளாராம்.