சினிமா

பிரபல நடிகர் ராஜாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? அவரைப்பற்றிய சில தகவல்கள்.

Summary:

Famous actor raja current status

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராஜா. பாக்கு வெத்திலை என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கடந்த 1981 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இவரது இயற்பெயர் வெங்கடேஷ். படத்திற்காக தனது பெயரை ராஜா என மாற்றிக்கொண்டார். பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக முரளி நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான கண்னுக்கு கண்ணாக என்ற படத்தில்தான் கடைசியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு சுமார் 19 வருடங்களாக எந்த ஒரு சினிமாவிலும் இவர் நடிக்கவில்லை. தனது சொந்த தொழிலை கவனித்துவந்த ராஜா தற்போது 19 வருடத்திற்க்கு பிறகு விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தில் துருவுக்கு அப்பாவாக நடித்துள்ளாராம்.

இதுபற்றி அவர் கூறுகையில், நானும் விக்ரம் சாரும் நீண்ட கால நண்பர்கள் ஒருமுறை ஆதித்யா வர்மா படம் பற்றி விக்ரம் சார் என்னிடம் கூறினார். மேலும், தனது மகனுக்கு அப்பாவாக நடிக்க முடியுமா என கேட்டார். அவரே கேட்டதும் என்னால் மறுக்க முடியவில்லை. உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன் என ராஜா கூறியுள்ளார்.


Advertisement