அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
பழம்பெரும் நடிகர் அருண் பாலி காலமானார்; சோகத்தில் திரையுலகம்., அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அக்ஷய் குமாரின் நடிப்பில் வெளியான படத்தின் மூலம் அறிமுகமான பிரபல நடிகர் வயது மூப்பால் காலமானார்.
பாலிவுட் திரையுலகில் பழம்பெரும் நடிகராக இருப்பவர் அருண் பாலி (வயது 79). இவர் நடிகர் கமல் ஹாசனுடன் ஹே ராம், அமீர்கானுடன் 3 இடியட்ஸ் உட்பட பல்வேறு படங்களில் அடித்துள்ளார்.
கடந்த 1991 ம் ஆண்டு அக்ஷய் குமாரின் நடிப்பில் வெளியான சவுகந்த் திரைப்படம் மூலமாக அறிமுகமான அருண் பாலி, ஷாருக்கான், சல்மான்கான், அமிதாப் பச்சன் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இதுமட்டுமல்லாது, அங்குள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை நாடகத்திலும் நடித்துள்ளார். இவரின் மறைவு திரைஉலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.