தானத்தின் மறுஉருவம் கேப்டன்.. 13 பேரின் உணவுக்காக மேனேஜரின் கன்னத்தை பதம்பார்த்த விஜயகாந்த் - மனம் திறந்த பிரபல நடிகர்..!

தானத்தின் மறுஉருவம் கேப்டன்.. 13 பேரின் உணவுக்காக மேனேஜரின் கன்னத்தை பதம்பார்த்த விஜயகாந்த் - மனம் திறந்த பிரபல நடிகர்..!


famous-actor-about-vijayakanth

தமிழ் திரையுலகில் ரஜினி, கமலுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். இவருக்கு தற்போதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் திரைப்படத்தில் நடித்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி கேப்டன் என்ற ஒற்றை வார்த்தைக்கு அனைவரும் இன்றளவும் கட்டுப்படுவர். 

மேலும், இவர் நடித்த படங்கள் டிவியில் ஒளிபரப்பப்பட்டால் அது நல்ல டிஆர்பி ரேட்டிங்கை கொடுக்கும் என்பது அனைவரும் தெரிந்த விஷயம். இவரின் திரைப்படங்களில் உள்ள கம்பீரமான வசனம் ரசிகர்களை இன்றளவும் கவர்ந்திருக்கிறது. தனது சக நடிகர்கள் டூப் போடுவதை பார்த்த இவர், பெரும்பாலும் டூப் போட்டு நடித்ததில்லை. 

படப்பிடிப்பில் யாருக்காவது அடிபட்டு விட்டால் தனக்கு அடிபட்டது போல துடித்து அவர்களுக்கு உதவிசெய்வார். திரைப்பட படப்பிடிப்பின் போது தனக்கு வழங்கப்படும் அதே உணவு ஒவ்வொருவருக்கும்  சென்று சேரவேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாக இருந்து அதற்காக பாடுபட்டவர். 

vijayakanth

Watch Video: https://www.facebook.com/reel/616771466472837?fs=e&s=cl

இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் நடிகர் மீசை இராஜேந்திரன் கூறுகையில், "கேப்டன் உணவு இடைவெளியில் உடனடியாக வெளியில் செல்லமாட்டார். அனைவரும் சாப்பிடுகிறார்களா? அனைவரது உணவிலும் சிக்கன், மட்டன் இருக்கிறதா? என்று உறுதிசெய்து இறுதியாகவே அவர் சென்று சாப்பிடுவார்.

நான் இதை நேரில் பார்த்துள்ளேன். அத்துடன் இதுகுறித்து நடிகர் சங்க உறுப்பினர்கள் என்னிடம் கலந்துரையாடும் பொழுது, ஒரு நாள் படப்பிடிப்பின்போது அங்கு பணியாற்றிய 13 பேருக்கு குழம்பில் கறி இல்லாமல் போய்விட்டது. அப்பொழுது வெறும் குழம்பு மட்டும் ஊற்றி சாப்பிட்டார்கள். கறி இல்லையா? என்று கேட்டதற்கு மேனேஜர் அவர்களை திட்டிவிட்டார். இதனை பணியாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள எதர்ச்சியாக கேப்டன் தூரத்திலிருந்து கேட்டுள்ளார். 

vijayakanth

உடனடியாக மேனேஜரை கூப்பிட்டு கன்னத்தில் ஓங்கி அறைந்து அவர்களுக்கு சாப்பாடு போட வேண்டுமல்லவா? அனைவருக்கும் தானே சாப்பாடு வாங்க கூறினேன். அவர்களுக்கு மட்டும் எப்படி வெறும் குழம்பு ஊற்றினீர்கள்? மட்டன் கொடுக்க வேண்டுமல்லவா எனக்கூறி, தனது பாக்கெட்டில் இருந்த பணத்தை கொடுத்து அவர்களுக்கு மட்டன் வாங்கி வர சொன்னதாக என்னிடம் கூறினர். 

இதுவரை இப்படி யாரும் செய்து நான் பார்த்ததில்லை. கேப்டனுக்கு பொதுவாகவே கோபம் வந்தால் யாரென்று பார்க்காமல் அடித்துவிடுவார். அதை நான் பலமுறை பார்த்துள்ளேன். ஆனாலும் ஐந்து நிமிடத்தில் அதனை மறந்து தவறை கண்டித்து இயல்பாக பழகுவார். அதுதான் அவரின் குணம். சாப்பாடு போட்டு அழகு பார்ப்பதில் கேப்டனை அடித்துக்கொள்ள ஆளில்லை என்று கூறியுள்ளார்.

Watch Video: https://www.facebook.com/reel/616771466472837?fs=e&s=cl