
நடிகர் கமலின் உடல்நிலை குறித்து வெளியான பொய்யான தகவல்!! என்னதான் ஆச்சு?? முழு தகவல் இதோ..
நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சமீபாத்தில் வெளிநாடு சென்று திரும்பிய நடிகர் கமல் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். கமல் அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுவருகிறது.
இந்நிலையில் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, கமல் அவர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த தகவல் வைரலானதை அடுத்து இந்த தகவல் முற்றிலும் பொய் என மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைவர் கமல்ஹாசன் அவர்கள் மருத்துவமனையில் இருந்து இன்னும் டிஸ்சார் ஆகவில்லை. ஆனால் நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைசிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்." என குறிப்பிட்டுள்ளார்.
வணக்கம்!
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) November 30, 2021
தலைவர் அவர்கள் மருத்துவமனையிலிருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால், நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
- முரளி அப்பாஸ்
செய்தித் தொடர்பாளர்
மக்கள் நீதி மய்யம்
Advertisement
Advertisement