சினிமா

அடக்கொடுமையே! ரம்யா பாண்டியனுக்கு இப்படியொரு சோதனையா? பதறியடித்து போய் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

fake account in twitter with ramya pandian name

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டிருந்தது.

ஜோக்கர் படத்தை அடுத்து அவர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ஆண் தேவதை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. மேலும், அவருக்கு வரும் வாய்ப்புகள் அனைத்தும் மாடர்னான கதாபாத்திரமாக இல்லாமல் வந்துள்ளது. 

ramya pandian க்கான பட முடிவு

இந்நிலையில் படவாய்ப்புக்காக அவர் அடிக்கடி ஹாட்டான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். மேலும் அதில் அவர் இடுப்பை காட்டி சேலை அணிந்து வெளியிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் வைரலானது.  அதனை தொடர்ந்து அவர் வித்தியாசமாக பல போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் பெயரில் உள்ள டுவிட்டர்கணக்கில் சில நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாச வார்த்தைகளையும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை கண்ட நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் இது ரம்யா பாண்டியனின் கவனத்திற்கு சென்ற நிலையில் அவர் எனது பெயரில் போலிகணக்குகள் தொடங்கி அவதூறு பரப்பி வருகின்றனர். அது எனது உண்மையான கணக்கு இல்லை.டுவிட்டரில் எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கியவர்கள் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்று விளக்கமளித்துள்ளார்.


Advertisement