BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
BREAKING: MLA பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்! "ஒரு நாள் பொறுத்திருங்கள் " நாளை தவெக விஜய் கட்சியில் இணைவது உறுதி..!!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடுத்த சமீபத்திய முடிவுகள் தேர்தல் சூழலில் புதிய அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவர் எடுத்த அடுத்தடுத்த அரசியல் நடவடிக்கைகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
அதிமுகவிலிருந்து நீக்கம்: காரணம் என்ன?
முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம், கட்சியைவிட்டு சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற அவரது கருத்து என்று கூறப்படுகிறது. இதை ஏற்காத எடப்பாடி பழனிச்சாமி, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நம்ப ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடக்குது! அடுத்தடுத்த அதிர்ச்சியில் EPS! பாஜகவில் இணையும் அதிமுகவின் முக்கிய புள்ளி! பலம் அதிகமாகும் பாஜக!
எம்எல்ஏ பதவிக்கும் ராஜினாமா
கட்சிநீக்கத்துக்குப் பிறகு, செங்கோட்டையன் இன்று சென்னையில் சபாநாயகரை நேரில் சந்தித்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் அவர் அதிமுகவிலிருந்து முழுமையாக விலகியிருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தில் இணைவது உறுதி?
செங்கோட்டையன் நாளை விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் “ஒரு நாள் பொறுத்திருங்கள்” என்ற பதில் வழங்கினார். இதனால் அவர் அந்தக் கட்சியில் இணைவது மிகவும் உறுதியாக பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேறி புதிய கட்சியில் இணைவது, வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னர் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: BREAKING: அடுத்தடுத்து அரசியலில் திடீர் திருப்பம்! சற்றுநேரத்தில் தமிழக அரசியலில் வெடிக்க போகும் பூகம்பம்....! அரசியலில் பரபரப்பு!