முதல் முறையாக மனம் திறந்த மஹாலக்ஷ்மியின் கணவர்! மனைவிக்கு என்ன கூறியுள்ளார் தெரியுமா?eswar-mahalakshmi-issue-maha-husband-talks

கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படும் செய்திகளில் ஓன்று சின்னத்திரை பிரபலங்கள் ஈஸ்வர் - மகாலஷ்மி இடையேயா தொடர்புதான். தனது கணவர் ஈஸ்வருக்கும், சின்னத்திரை பிரபலம் மஹாலக்ஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாகவும், தனது மகளை ஈஸ்வர் தவறான எண்ணத்தில் தொட்டதாகவும் கூறி ஈஸ்வரின் மனைவி புகார் கூறியிருந்தார்.

இதுகுறித்து பேசிய மஹாலக்ஷ்மி தனது கணவரை கடந்த ஜூன் முதல் பிரிந்து வாழ்வதாகவும், தனது கணவருக்கும், ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீக்கும் தான் தொடர்பு இருப்பதாக அவர் ஒரு புரம் கூறியிருந்தார்.

Eswar

இந்நிலையில் இதுகுறித்து முதல் முறையாக மகாலஷ்மியின் கணவர் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்: அதில், இதுவரை ஜெயஸ்ரீயை இரண்டு அல்லது மூன்று தடவை மட்டுமே தான் பார்த்திருப்பதாகவும், அதுவும் குடும்பங்கள் ஒன்றினையும் விழாக்களில் மட்டுமே பார்த்திருப்பதாகவும், அவருக்கும் எனக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும், மஹாலக்ஷ்மி - ஈஸ்வர் பற்றி பேச தான் தயாராக இல்லை என்றும், தான் அதை பற்றி பேச விரும்பவில்லை, ஏனெனின் நான் எனது மனைவியுடன் சேர்ந்து வாழத்தான் ஆசைப்படுகிறது, எது எப்படி இருந்தாலும் அனைத்தையும் விட்டுவிட்டு வா மஹாலஷ்மி, நாம் சேர்ந்து வாழலாம் என மகாலஷ்மியின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தங்கள் மகனை தன்னிடம் கூட்டிவந்து காட்டுமாறும், தான் அவனை பார்த்து 7 மாதம் ஆகிவிட்டதாகவும், நாம் இருவரும் அமர்ந்து பேசினால் அணைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் மகாலஷ்மியின் கணவர்.