சினிமா

கொஞ்சிக்கொள்ளும் ஈஸ்வர் - மகாலக்ஷ்மி! இணையத்தில் வைரலாகும் ஆதார புகைப்படம்!

Summary:

Eswar mahalakshmi Facebook chat image

கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படும் பிரச்சனைகளில் ஓன்று சின்னத்திரை பிரபலங்கள் ஈஸ்வர் - மகாலஷ்மி விவகாரம். தனது கணவர் ஈஸ்வருக்கும், நடிகை மகாலஷ்மிக்கும் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ புகார் கூறியிருந்தார்.

மேலும், தனது மகளிடம் ஈஸ்வர் தவறாக நடந்துகொண்டதாகவும், தப்பான எண்ணத்தில் அவர் மீது கை வைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து எந்த விளக்கமும் கூறாமல் இருந்த நடிகை மகாலஷ்மி, தனது கணவருக்கும், ஈஸ்வரின் மனைவி ஜெய்ஸ்ரீகும் தொடர்பு இருப்பதாக கூறி பகீர் கிளப்பினார்.

இந்நிலையில் தனது கணவருக்கும், மகாலஷ்மிக்கும் தொடர்பு இருப்பது உறுதி என்றும் அதற்கான ஆதார புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஜெய்ஸ்ரீ. அதில், ஈஸ்வர் - மகாலஷ்மி இருவரும் பேஸ்புக்கில் ஒருவரை ஒருவர் பையா, பப்பு என கொஞ்சிக்கொள்கின்றனர்.

செம டா பையா என மகாலஷ்மி கமெண்ட் செய்ய அதற்க்கு தாங் யு பப்பு என ஹார்ட் ஸ்மய்லியுடன் பதில் கூறியுள்ளார் ஈஸ்வர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement