சினிமா

அட.. ஈரோடு மகேஷின் மனைவி யார் தெரியுமா? அவரும் பிரபல தொகுப்பாளினிதானாம்! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

விஜய் தொலைக்காட்சிகளில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், மேலும் சில நிகழ்ச்சிகளில

விஜய் தொலைக்காட்சிகளில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், மேலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஈரோடு மகேஷ். அசத்தப்போவது யாரு  நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியான களமிறங்கிய அவர் தனது திறமையால் முன்னேறி தற்போது காமெடியன், தொகுப்பாளர், நடுவர், நடிகர் என செம பிஸியாக உள்ளார்.

தமிழில் பட்டப் படிப்பை முடித்த இவர் தற்போது யூடியூபில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.  ஈரோடு மகேஷின் தாயார் மீனாட்சி. இவர் தனது 28 வயதில் கருவுற்றிருந்தபோது கேட்கும் திறனை இழந்தாராம். ஆனாலும் அதனை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் கஷ்டப்பட்டு தனது இரு மகன்களையும் வளர்த்துள்ளார்.

மேலும் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் மகேஷ், சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு அமிழ்தா என்ற அழகிய மகள் உள்ளார். மகேஷ் தான் எப்பொழுது மேடையில் பேசினாலும் தனது வெற்றிப் பயணத்திற்கு காரணம் மூன்று பெண்கள்தான். அவர் என் தாய், மனைவி, மகள் என அடிக்கடி கூறுவார். இந்நிலையில் மகேஷின் மனைவி மற்றும் மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement