சினிமா

சொல்ல வார்த்தையில்லை.. என்ஜாய் என்சாமி பாடல் பிரபலம் திடீர் மரணம்! மிக உருக்கமாக தெரிவித்த பாடகர் !!

Summary:

அண்மையில் வெளியாகி பட்டிதொட்டி எல்லாம் ஒலித்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவ

அண்மையில் வெளியாகி பட்டிதொட்டி எல்லாம் ஒலித்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து பெருமளவில் டிரெண்டாகி பிரபலமான பாடல் என்ஜாய் எஞ்சாமி. இந்தப் பாடலை பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடி இருந்தனர். 
 நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. 

மேலும் இந்தப் பாடலில் ஒப்பாரி பாடலின் மூலம் பிரபலமான பாக்கியமா சில வரிகளை பாடி, ஆடியும் இருப்பார். இவர் காலமானார் என்ற செய்தியையும், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், பாக்கியம்மா, இழந்த பல உயிர்களுக்காக உங்கள் இதயத்தில் இருந்து நீங்கள் பாடி இருக்கிறீர்கள். தற்போது உங்களது அகால இழப்பால் சொல்ல வார்த்தை இல்லாமல் சிரமப்படுகிறேன்.  கலைஞர் இறக்கக்கூடும், ஆனால் அவர்களுடைய கலை எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருக்கும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement