சினிமா

ஏன் இப்படி? திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை எமி செய்துள்ள காரியத்தை பார்த்தீர்களா! ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து எமி ஜாக்சன் தனுஷ், விஜய், விக்ரம், ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் எமி ஜாக்சன் கோலிவுட்டில் சூப்பர் கேர்ள் என்ற வெப்சீரிசிலும் நடித்துள்ளார். இந்தநிலையில் அவர் பிரிட்டனை சேர்ந்த ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து  வந்துள்ளார். மேலும் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே அவர்களுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண்குழந்தை பிறந்தது.

மேலும் எமி ஜாக்சன் விரைவில் தனது காதலனை திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென தனது காதலருடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.


Advertisement