ஆத்தாடி.. என்னா வெயிலு! செம ஜாலியாக இந்த குட்டி யானை செய்யும் சேட்டையை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!

ஆத்தாடி.. என்னா வெயிலு! செம ஜாலியாக இந்த குட்டி யானை செய்யும் சேட்டையை பார்த்தீங்களா!! வைரலாகும் வீடியோ!!



elephant-bath-video-viral

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டு எடுத்து வருகிறது. இதனை தாங்கமுடியாமல் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பறவைகளும் பெரும் அளவில் அவதிப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் யானை ஒன்று வெயிலின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள சிறிய தொட்டியில் ஆனந்த குளியல் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் செல்லப்பிராணிகள் மற்றும் காட்டு விலங்குகளின் அழகிய தருணங்கள் மற்றும் சில குறும்பு வீடியோக்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருவார். இந்நிலையில் அவர் தற்போது யானைகுட்டி தண்ணீருக்குள் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் குட்டியானை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள், செம ஜாலியாக குதித்து தனது உடலை முழுவதும் நனைத்து புரண்டு புரண்டு மகிழ்ச்சியாக விளையாடுகிறது. அதன் அருகே தாய் யானை நின்று தனது குழந்தையை கண்ணும் கருத்துமாக கண்காணித்து கொண்டிருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.