அரசியல் இந்தியா

தேர்தலில் களமிறங்கும் நடிகர் கருணாஸ் பட நடிகை; வெற்றி உறுதியாம்.!

Summary:

election 2019 - nawneet kauvr - maharastira canditate

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மகராஷ்டிராவில் உள்ள ஒரு தொகுதியில் நடிகை நவ்நித் கவுர் போட்டியிட உள்ளார்.

நடிகை நவ்நீத் கவுர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த அரசாங்கம் என்ற படத்திலும்  அதன் பிறகு நடிகருடன் கருணாஸுடன் ஜோடி சேர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்திலும் நடித்திருந்தார்.

மேலும், தென்னிந்திய மொழிப்படங்கள் மற்றும் பஞ்சாபி படங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவில் ரவி ராணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

யுவாபிமானி என்ற கட்சியை நடத்தி வரும் ரவி ராணா அமராவதி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது அவரின் கட்சி காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை எதிர் கொள்கிறது. ஏற்கனவே MLA வாக இருப்பதால் அந்த தொகுதியில் தனது மனைவி நவ்னீத் கவுரை களமிறங்க செய்துள்ளார். ரவி ராணா அத்தொகுதியில் பல நலத்திட்டங்களை செய்துள்ளதால் வெற்றி பெறுவது உறுதியாம்.


Advertisement