BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட்.. பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு.!
2002ம் ஆண்டு "பைவ் ஸ்டார்" படத்தில் அறிமுகமானவர் கனிகா. தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கனிகா, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் சில முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார் கனிகா. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "எதிர்நீச்சல்" தொடரில் நடித்து வருகிறார் கனிகா. மூன்று மருமகள்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரில் கனிகா மூத்த மருமகளாக நடித்துள்ளார்.
முன்னதாக இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த தொலைக்காட்சித் தொடர் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார் கனிகா. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் இப்போது சினிமாவில் நடிக்கவுள்ளார். மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கனிகா, "மிஷ்கின் படங்கள் மிகவும் தனித்துவமானவை. அவர் கதை சொல்லும் விதம், திரைக்கதை அனைத்தும் தனித்துவமானவை. அவருடைய புதிய படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.