வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலக முடிவெடுத்த ஆதிரை.. என்ன காரணம் தெரியுமா.?
சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் எதிர்நீச்சல். பல எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக டிஆர்பி யில் முதலிடம் பிடித்துள்ளது. ஆணாதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தையும் எதிர்த்து எடுக்கப்படும் சீரியல்களில் முதன்மையானது எதிர்நீச்சல்
இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளின் ஆண் ஆதிக்கத்தையும் அவர்கள் மனைவிகளின் பெண் அடிமைத்தனத்தை எதிர்க்கும் விதத்தையும் மக்கள் ரசிக்கும் விதமாக சீரியலாக எடுத்துச் செல்கிறார் எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம். எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ரசிகர் கூட்டங்கள் பெருகிக்கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.
இதே நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடித்திருக்கும் ஆதி குணசேகரனின் தங்கை ஆதிரைச்செல்வி இந்த சீரியலில் இருந்து விலக முடிவெடுத்து இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அவர் கூறியது, "ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடிக்க ஒத்துக் கொண்டேன். ஆனால் போகப் போக பலர் என்னை சமூக வலைத்தளங்களில் திட்டி கமெண்ட் செய்தனர். முதலில் எனக்கு பெரிதாக தெரியவில்லை. சிறிது நாட்களுக்குப் பிறகு இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்தது. இதனால் சீரியலை விட்டு விலகி விடலாம் என்று முடிவு செய்தேன். ஆதிரையின் கதாபாத்திரம் பாசிட்டிவாக மாறுவதாக காட்டப்பட்டதால் சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறேன் என்று கூறினார்.