"மறைந்த எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை வைத்த பாஜகாவினர்" நெகிழும் ரசிகர்கள்.!

"மறைந்த எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்துவிற்கு சிலை வைத்த பாஜகாவினர்" நெகிழும் ரசிகர்கள்.!


Edhirneechal fame marimuthu statue

சன் டிவியில் ஒளிபரப்பாகி, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் "எதிர்நீச்சல்".  இந்த தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து ரசிகர்களிடம் மிகப் பிரபலமானார்.

suntv

இந்தத் தொடரில் மாரிமுத்து பேசிய "ஏய்.. இந்தாம்மா.." என்ற வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் மீம் கிரியேட்டர்களும் இந்த வசனத்தை உபயோகித்து பல நகைச்சுவை மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து கடந்த மாதம் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்து வந்த நிலையில், அவரால் தொடர முடியவில்லை.

suntv

இது ரசிகர்களுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடிகர் மாரிமுத்துவுக்கு பாஜகாவினர் சிலை வைத்துள்ளனர். மேலும் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கும் சிலை வைத்துள்ளனர். இதனால் மாரிமுத்துவின் ரசிகர்கள் நெகிழ்ந்துள்ளனர்.