எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து இனி சீரியலில் நடிக்க மாட்டாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி.?

எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து இனி சீரியலில் நடிக்க மாட்டாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி.?


edhirneechal-fame-mari-muthu-viral-news

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மாரிமுத்து. இவர் தனது வாழ்க்கையின் ஆரம்பகாலகட்டத்தில் துணை இயக்குனராக சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். இதன் பின்பு படிப்படியாக முன்னேறி இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமடைந்தார்.

suntv

இது போன்ற நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சலில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பு  திறமைக்காக ரசிகர் கூட்டங்கள் பெருகி வருகின்றனர்.

இதன்படி சமீபத்தில் மாரிமுத்து தொடர்ந்து பல தொலைக்காட்சி பேட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகிறார். சீரியலில் வில்லனாக நடித்திருந்தாலும் பேட்டிகளில் இவர் பேசுவது பலதரப்பட்ட மக்களை கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

suntv

இந்நிலையில் நடிகர் மாரிமுத்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடர்களை வாயடைக்க வைக்கும்படி பல அறிவியல்பூர்வமான கேள்விகளை எழுப்பினார். இந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் பழ.ஆறுமுகம் என்பவர் மாரிமுத்துவின் மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதற்கு மாரிமுத்து பதிலளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடர போகிறேன் என்று அதிரடியாக கூறியிருக்கிறார். இதனால் மாரிமுத்து இப்படத்திற்கு பிறகு சீரியலில் நடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.