புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கணவரை இழந்து கண்ணீருடன் பேட்டியளித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களுக்கு மத்தியில் இது வித்தியாசமான கதையை கொண்ட சீரியலாக இருப்பதால் இந்த சீரியலின் டிஆர்பி அதிகமாய் கொண்டே வருகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்களின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடித்து வரும் குணசேகரன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பாராட்டையும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது.
இது போன்ற நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கும் நடிகை சத்தியபிரியா இந்த சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் நிஜ வாழ்க்கையில் நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் கண்ணீருடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, சத்யபிரியா தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு பிறகு அவர் இறந்து விட்டதால் சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மீண்டும் நடிக்க தொடங்கி சத்யபிரியாவே அவரது குடும்பத்தை பார்த்துக் கொண்டாராம். அவரின் கஷ்டங்களை யூட்யூபில் வீடியோ ஒன்றில் கண்ணீருடன் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.