சினிமா

அழுமூஞ்சி...பிரபல நடிகையை கிண்டல் செய்து நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா

Summary:

நடிகை அதிதி ராவ்விற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நடிகர் துல்கர் சல்மான் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். மேலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் பெருமளவில் பிரபலமானது. 

 மலையாள சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் துல்கர் சல்மான்க்கு  ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழில், நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வந்த பிருந்தா, இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் நடிக்கிறார்.

 ஹே சினாமிகா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.  ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் கொரனோ ஊரடங்குக்கு முன்பு  சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அதிதி ராவ்விற்கு நடிகர் துல்கர் சல்மான் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் அவர்  அழுமூஞ்சி என கிண்டலாக கூறி படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அந்த இரு புகைப்படங்களிலும், அதிதி அழுவது போல முகத்தை வைத்திருந்தார்.


Advertisement