அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"ஒரு வயதான பெண், என்னை அந்த இடத்தை பிடித்து அமுக்குனாங்க" பிரபல நடிகர் துல்கர் சல்மானின் பரபரப்பு நேர்காணல்..
மலையாள திரையுலகத்தில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான 'ஓ காதல் கண்மணி' போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

இவ்வாறு பல படங்கள் நடித்து தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார் துல்கர் சல்மான். தற்போது இவர் 'கிங் ஆப் கோதா' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரமோஷனுக்காகப் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட துல்கர் சல்மானிடம் தொகுப்பாளர் "உங்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட ரசிகரை பற்றி கூறுங்கள்" என்று கேள்வி கேட்டார். அதற்கு துல்கர் "ஒரு வயதான பெண்மணி ஏன் என்னிடம் அப்படி நடந்து கொண்டார் என்றே தெரியவில்லை.

கிங் ஆப் கோதா படத்தின் ப்ரோமோஷநிற்க்கு ஒரு இடத்திற்கு சென்று இருந்தேன். அங்கு ஒரு வயதான பெண்மணி என் பின்னால் நின்று பின்பக்கத்தை பிடித்து அமுக்கினார். என்னால் வலி தாங்க முடியாமல் அவரிடம் அந்தப் பக்கம் போய் நில்லுங்கள் என்று கூற நினைத்தேன். போட்டோ எடுக்கும் போது கூட என்னால் சிரிக்க முடியவில்லை" என்று கூறியதை கேட்டு துல்கர் சல்மானின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.