சினிமா

அடக்கொடுமையே பாலிவுட்டில் இப்படியெல்லாமா நடக்குது! கங்கணாவை தொடர்ந்து பிரபல இயக்குனர் வெளியிட்ட பகீர் தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Drugs used last 10 years secret opened by bollywood director

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவரது உயிரிழப்பில் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சுஷாந்தின் மரணம் குறித்து தற்போது சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்திக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. 

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் போதைப்பொருள்  குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சமீபத்தில் வெளியிட்டார். அதில் பாலிவுட் உலகில் அனைத்து பார்ட்டிகளிலும் போதைபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. போதை பொருள் தடுப்பு போலீசார்கள் பாலிவுட் உலகில் நுழைந்தால் பல பிரபலங்கள் சிறைக்கு செல்வார்கள். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவரும் என கூறியிருந்தார்.

அவரை தொடர்ந்து இந்தி இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியும் இதுகுறித்து தற்போது குற்றம்சாட்டிள்ளார். அவர் பாலிவுட் உலகில் கடந்த 10 ஆண்டுகளாகவே போதைப்பொருள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. பிரபலங்கள் பலரும் இதனை சர்வசாதாரணமாக பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருள் மட்டுமல்ல மாபியாக்கள், பயங்கரவாத செயல்கள் போன்ற அனைத்து விதமான கொடூர குற்ற சம்பவங்களும் அதிகளவில் நடந்து வருகிறது என கூறியுள்ளார். இதனால் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

 


Advertisement