என்னது.. சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் தேதி மாற்றமா? இதுதான் காரணமா?? வெளிவந்த தகவல்!!

என்னது.. சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் தேதி மாற்றமா? இதுதான் காரணமா?? வெளிவந்த தகவல்!!


don-released-date-changed-news-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்  சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே டாக்டர் படத்தில் கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் கல்லூரி கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள டான் படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

sivakarthickeyan

டான் திரைப்படம் மே 13ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் மே 20ஆம் தேதி உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரிலீசாக  உள்ளதால் டான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் படம் ஒரு வாரம் முன்னதாக மே 5 ஆம் தேதியே ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.