சிவகார்த்திகேயனின் டான்.. புகைப்படத்துடன் படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயனின் டான்.. புகைப்படத்துடன் படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!


Don movie shooting over

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும்  சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

டான் படத்தில் ஹீரோயினாக, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்திருந்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளாராம்.மேலும்  எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

டான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இறுதியாக படப்பிடிப்புத்தளத்தில்
படக்குழுவினர் ஒன்றாக எடுத்துகொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். அதனுடன் டான் படத்தை விரைவில் திரையில் பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.