ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த டான் படம் ரிலீஸ்! அதுவும் எப்போ தெரியுமா?? வெளிவந்த சூப்பர் தகவல்!!don-movie-release-date-announced

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர்   சிவகார்த்திகேயன். அவர் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

டான் படத்தில் ஹீரோயினாக, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்திருந்த பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் அதில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டான் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டான் படம் மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.