ப்பா.. ஹேண்ட்சம் காலேஜ் ஸ்டூடண்டான சிவகார்த்திகேயன்! அடமழையிலும் அசத்தலான வெளிவந்த டான் பர்ஸ்ட் லுக்!!

ப்பா.. ஹேண்ட்சம் காலேஜ் ஸ்டூடண்டான சிவகார்த்திகேயன்! அடமழையிலும் அசத்தலான வெளிவந்த டான் பர்ஸ்ட் லுக்!!


Don movie first look poster released

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. இப்படம் வசூலிலும் 100 கோடியை கடந்து சாதனை படைத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் டான் படத்தில் அவருக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் இணைந்து நடித்திருந்த பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் அவர்களுடன் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளாராம்.

இந்த நிலையில் இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வைரலாகி வருகிறது. மேலும் கல்லூரி கதையை மையமாகக் கொண்டு வெளிவரவிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும் அதிகரிக்க துவங்கியுள்ளது.