டான் திரைப்படம் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா....! பிரமாண்ட சாதனை...

டான் திரைப்படம் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா....! பிரமாண்ட சாதனை...


don-movie-collections

ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பின் தனது திறமையாலும், கடின உழைப்பாலும் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். கல்லூரி கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள டான் படத்தில் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், ஷிவாங்கி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

டான் திரைப்படம் பெரும் எதிர்பார்பில் மே 13ம் தேதி வெளியான  நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டான் படம் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடி வசூலை கடந்துள்ளது. மேலும் இன்று விடுமுறை நாள் என்பதால் முதல் இரண்டு நாட்களை விட அதிக வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.