சினிமா

பாட்டி வயசுல கல்யாணம்.! நயன்தாராவை கலாய்த்த மருத்துவரை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி.!

Summary:

பாட்டி வயசுல கல்யாணம்.! நயன்தாராவை கலாய்த்த மருத்துவரை வெளுத்து வாங்கிய பிரபல பாடகி!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர்  இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அண்மையில் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ரிசார்ட்டில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் பல பிரபலங்களும் நேரில் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து கூறினர். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா செம பிஸியாக இருந்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் பலரும் இவரது திருமணத்திற்கு வாழ்த்து கூறியும், சிலர் மோசமான கருத்துக்களால் விமர்சனம் செய்தும் வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து மருத்துவர் ஒருவர், நயன்தாராவின் நடிப்பு திறமைக்கு மதிப்பு தருகிறேன். ஆனால் பாட்டி வயதில் (40 வயது) குடும்பம், குழந்தை என அவர் திட்டமிட்டிருப்பதை நினைக்கும்போது சிரிப்பு வருகிறது. அவருக்கு கருத்தரிப்பு மையங்கள்தான் உதவி செய்யும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பின்னணி பாடகி சின்மயி, இந்த பதிவை பகிர்ந்து, ‘மருத்துவக் கல்லூரிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சார்ந்த பிரச்சினைகள் குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் இது கிடைத்தது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை குறித்து இந்த அற்புதமான மருத்துவர் வெளியிட்ட மோசமான கருத்து என அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.


Advertisement