ரெடியாகுங்க.. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம ஹேப்பியான நியூஸ்! வெளியான சூப்பரான அறிவிப்பு!

ரெடியாகுங்க.. சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம ஹேப்பியான நியூஸ்! வெளியான சூப்பரான அறிவிப்பு!


doctor-movie-release-date-announced

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். மேலும்  கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து  சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹீரோயினாக பிரியங்கா என்பவர் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
இந்நிலையில்  படம் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது டாக்டர் திரைப்படம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் நீங்கள் தவறாமல் மறக்காமல் வாக்களிக்கவும். ஒவ்வொரு வாக்கும்  மு க்கியமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.