சினிமா விளையாட்டு Ipl 2019

அனுஷ்கா சர்மா பயன்படுத்தும் ஹேன்ட் பாக்கின் விலை எவ்வளவு தெரியுமா? கேட்டாலே தலை சுற்றும்

Summary:

Do you know the price of anushka sharma hand bag

இந்தியா மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளின் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார். இவர் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

இவர்கள் காதலிக்க துவங்கிய காலத்தில் இருந்தே விராட் கோலி விளையாடும் போட்டிகளை காண அனுஷ்கா சர்மா நேரடியாக மைதானத்திற்கே சென்றுவிடுவார். மைதானத்தில் இருந்து கொண்டே கோலி அனுஷ்காவிற்கு செய்த செய்கைகள் பல சமயங்களில் சர்ச்சைகளை கிளப்பியது. 

ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 6 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இந்த வேதனை ஒருபுறம் இருக்க, ஒரு ஆட்டத்தை கூட நேரில் பார்க்க அனுஷ்கா சர்மா மைதானத்திற்கு வரவில்லை என்ற வருத்தமும் பெங்களூரு ரசிகர்களுக்கு இருந்து வருகிறது. 

இந்நிலையில், சமீபத்தில் ஏர்போர்ட்டிற்கு அனுஷ்கா சர்மா வந்திருந்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரிதாக எந்தவித மாடர்ன் உடையும் இல்லாமல், சாதாரன வெள்ளைநிற ஆடையில் வந்திருந்தார். ஆனால், அவர் கொண்டுவந்திருந்த ஹேன்ட் பேக் தான் அனைவருக்கும் அதிகமான ஈர்ப்பை கொடுத்துள்ளது. 

அவர் கொண்டு வந்திருந்த RIVE GAUCHE SAINT LAURENT ஹேன்ட் பேக்கின் விலை $1416 டாலர், இந்திய ரூபாயில் ₹98,015. அவர் சாதாரனமாக எடுத்து செல்லும் ஒரு ஹேன்ட் பாக்கின் விலையே கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ளது.


Advertisement