சினிமா

தன் அழகான மருமகளுடன் இருக்கும் பிரபல இயக்குனர்! வைரலாகும் புகைப்படங்கள்

Summary:

Director with his daughter in law

தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதைஅமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர் பாக்கியராஜ். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் என்னும் ஊரில் பிறந்தவர்.

இயக்குனர் பாரதிராஜா முதல் படம் இயக்கும்போது, பாக்யராஜ் அதில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள். இவருக்கு மாபெரும் வெற்றி ஈட்டிய திரைப்படங்கள் அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை. பின், 1982 ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்யராஜ் கையாண்ட சில விஷயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பேசப்படுகிறது. 

தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த "பிரவீணா" என்னும் நடிகையை மணந்தார். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். 

சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருந்தார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு தன் முதல் படமான சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார்.

நடிகர் சாந்தனுவுக்கும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கீர்த்திக்கும் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி - விஜயகுமார் இவர்களின் மகளே கீர்த்தி ஆவார். 

இந்நிலையில் சாந்தனுவின் மனைவி கீர்த்தி தன் மாமனார் பாக்கியராஜ் மற்றும் மாமியாருடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


Advertisement