BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அந்த விஷயம் அஜித்திடம் ரொம்ப பிடிக்கும்... புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உலகம் முழுவதும் உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர்கள் ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன் போன்றவர்கள் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறைமுகமாக பல உதவிகளை செய்துள்ளார்.

இந்நிலையில் அஜித் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறிய பேட்டி பதிவு வைரலாகி வருகிறது. அதில் திரையுலக பின்னணி இல்லாமல் சினிமாவுக்குள் வந்த அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் தன்னைத்தானே உருவாக்கி கொண்டவர். அதுமட்டுமின்றி தன்னுடைய மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். அதைப்போல் எல்லோராலும் இருந்துவிட முடியாது, அந்த விஷயம் அஜித்திடம் எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.