பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ஆபாசமா பேசி பிரபலமாக இருக்கும் ஜி பி முத்து, நடிகர் ஆகிடமுடியுமா.? இயக்குனர் வெங்கட் பிரபுவின் சர்ச்சையான பேச்சு.!
சமூக வலைத்தளமான யூடியூபில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் ஜி பி முத்து. இதற்கு முன்பாக டிக் டாக் எனும் செயலியில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டார். இதன்பிறகு யூட்யூபில் இவர் வெளியிட்ட வீடியோ வைரலானது.
மேலும் ஜிபி முத்து தொடர்ந்து ஆபாசமாக கெட்ட வார்த்தைகளை பேசி பல வீடியோக்களை வெளியிட்டு வருவார். இதனாலேயே இவரது வீடியோ வைரலானது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இருந்து சில நாட்களிலேயே வெளியேறிய ஜி பி முத்து 'குக் விட் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு கலக்கி வந்தார். மேலும் 'ஓ மை கோஸ்ட்' போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக இருக்கிறார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெங்கட் பிரபு, ஜி பி முத்து குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆபாசமாக பேசி பிரபலமானவர்கள் எல்லாம் நடிகர்களாக முடியாது. ஜி.பி முத்து ஒரு நடிகரே இல்லை. தியேட்டர் கலைஞர்களுக்கு நடிப்பு என்பது நன்றாகவே தெரியும். இவ்வாறாக இவர் பேசியிருக்கிறார். இதனால் ஜி பி முத்து ரசிகர்கள் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.