சினிமா

என்னது! பார்ட்டி திரைப்படமும் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறதா? தீயாய் பரவிய தகவல்! தயாரிப்பாளர் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

Summary:

Director tweet about release of party movie

தமிழ் சினிமாவில் அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பார்ட்டி. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஜெய், சிவா, கயல் சந்திரன், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி என பெரும் நட்சத்திரக் கூட்டமே நடித்துள்ளது. மேலும் இதில் நடிகர் ஷியாம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பார்ட்டி  திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் கடந்த வருடமே முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் படம் வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த நிலையில் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சமீபகாலமாக தகவல் பரவியது.

From the desk of M/s Amma Creations @TSivaAmma

We noticed that a section of media is carrying news about our upcoming project " Party ” will skip theatrical release and will have a direct OTT release. We deny such buzzes to be baseless rumours as we don’t have such plans.
— Done Channel (@DoneChannel1) August 25, 2020

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் எங்களது பார்ட்டி திரைப்படம்  திரையரங்கு வெளியீட்டை தவிர்த்து நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சில ஊடங்களில் வந்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். அப்படி எந்த திட்டமும் எங்களிடம் இல்லை. இதுபோன்ற சலசலப்புகள் ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

Advertisement