சினிமா

விஸ்வாசம் படத்தின் கதை இந்த பிரபல நடிகரின் வாழ்க்கையா? உண்மையை உடைத்த இயக்குனர் சிவா!!

Summary:

இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை

இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை பெற்று பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. மேலும் இப்படத்தின் பாடலுக்காக இசையமைப்பாளர் இமானுக்கு சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில் விஸ்வாசம் படம் இயக்குனர் சிவாவின் தம்பியும், நடிகருமான பாலாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என தகவல்கள் பரவி வந்தது. அதாவது தமிழ் சினிமாவில் அன்பு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா. அதனைத் தொடர்ந்து அவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவர் வீரம் படத்தில் கூட அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவை காதலித்து 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த அவர்கள் 2019ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் இதனை வைத்துதான் இயக்குனர் சிவா விஸ்வாசம் படத்தை இயக்கியதாக தகவல்கள் பரவியது.

ஆனால் இதுகுறித்து பேசிய சிவா, 
இந்த நேரத்தில் விஸ்வாசம் படத்தின் இசை குறித்து மட்டும்தான் பேச விரும்புகிறேன். சமூக வலைதளங்களில் நானில்லை. அதனால அங்கே என்ன எழுதியிருக்காங்கன்னு எனக்கு தெரியவில்லை. விஸ்வாசம் கதைக்கும், என் தம்பி பாலாவின் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.


Advertisement