சினிமா

டாப் ஹீரோவுடன் கூட்டணி சேரும் சிறுத்தை சிவா... யார் அவர் தெரியுமா.?அட இப்படி ஒரு கதையா...

Summary:

டாப் ஹீரோவுடன் கூட்டணி சேரும் சிறுத்தை சிவா... யார் அவர் தெரியுமா.?அட இப்படி ஒரு கதையா...

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக இருப்பவர் சிறுத்தை சிவா. இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. சிறிது காலம் இடைவெளியில் இருந்த சிவா தற்போது சூர்யாவுடன் கூட்டணி சேருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த படம் ஒரு ஸ்கிரிப்ட் பீரியட் கதை என்றும் அதை பாகுபலி, கேஜிஎப் போல இரண்டு பாகங்களாக எடுக்க இருக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement