இயக்குனர் ஷங்கர் மகள் ஹீரோயின் ஆனார்.! யார் படத்தில் அவர் நாயகி தெரியுமா.? தரமான கூட்டணி.!

இயக்குனர் ஷங்கர் மகள் ஹீரோயின் ஆனார்.! யார் படத்தில் அவர் நாயகி தெரியுமா.? தரமான கூட்டணி.!


director shankar daughter act as heroine

கார்த்தி - முத்தையா கூட்டணியில் உருவாகும் ‘விருமன்’ படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் நாயகியாக அறிமுகமாகிறார்.

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும்  ‘விருமன்’ படத்தினை, முத்தையா இயக்குகிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முதல் முறையாக தனது படத்திற்கு யுவன் உடன் கூட்டணி அமைக்கிறார் முத்தையா.

கொம்பன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் முத்தையா உடன் கார்த்தி கூட்டணி அமைத்துள்ளார். விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். அதிதி இடம்பெற்றுள்ள ‘விருமன்’ பட போஸ்டரை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, "அதிதி ஷங்கரை வரவேற்கிறேன்! நீ அனைவரது இதயங்களையும் வெல்லப் போகிறாய். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உன் வரவு நல்வரவு ஆகுக"என கூறியுள்ளார்.