நானே வருவேன்; படத்தின் கதையை எழுதியது இந்த முன்னணி நடிகர்தானா.! இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்த சுவாரசிய தகவல்!!Director Selvaragavan shares about nane varuven movie

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் பெருமளவில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான நானே வருவேன் திரைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. ஏராளமான மர்மங்கள் நிறைந்து பிரிந்துபோன சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

thanush

கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இப்படத்தில் எல்லி அவ்ராம், இந்துஜா ரவிச்சந்தர், யோகி பாபு மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனரும், நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் கூறுகையில், நானே வருவேன் படத்தின் கதையை எனது சகோதரர் தனுஷ்தான் எழுதினார். அவர் எழுதிய இந்த கதையை இயக்குவது, இப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கனவு. அது தற்போது சரியான நேரத்தில் நிறைவேறியுள்ளது என கூறியுள்ளார்.