"படம் பற்றி கருத்து சொன்னா 'ஃபோன் கால் கட்' பண்றாரு.."! விழா மேடையில் லோகேஷ் கனகராஜை சீண்டிய 'SAC'.!

"படம் பற்றி கருத்து சொன்னா 'ஃபோன் கால் கட்' பண்றாரு.."! விழா மேடையில் லோகேஷ் கனகராஜை சீண்டிய 'SAC'.!



director-sac-pulled-the-leg-of-direct-lokesh-kanagaraj

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் தேசிங்கு ராஜா 2 என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்தத் திரைப்படத்தினை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எழில் இயக்க இருக்கிறார். இவர் தளபதி விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற மிகப் பெரிய வெற்றி படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Director SAC

மேலும் எழில் இயக்கும் 25 வது திரைப்படம் இது என்பதால் இந்த நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. தேசிங்கு ராஜா 2 திரைப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ்.ஏ சந்திரசேகர் லியோ படத்தைப் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பேசியவர் தனது மகன் விஜயின் திரைப்படத்தின் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.

இது தொடர்பாக பேசிய அவர் "நான் சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்த்தேன். அந்தத் திரைப்படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தது. ஆனால் இரண்டாவது பாதி அவ்வளவு சிறப்பாக இல்லை. இது தொடர்பாக அந்த திரைப்படத்தின் இயக்குனரை ஃபோனில் தொடர்பு கொண்டு பேசினேன். முதல் பாதி நன்றாக இருந்ததாக என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்தேன். இரண்டாவது பாதியில் இருக்கும் குறைகள் பற்றியும் அவரிடம் விவரித்தேன்".

Director SAC

மேலும் அந்த திரைப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு மதத்தைப் பற்றிய கருத்துக்கள் தவறு என்று அவரிடம் எடுத்துக் கூறினேன். பாராட்டும் போது கேட்டுக் கொண்டிருந்தவர் விமர்சனங்களை முன் வைக்கும் போது சாப்பிட போகிறேன்" என்று கூறிவிட்டு  அழைப்பை துண்டித்ததாக வருத்தத்துடன் தெரிவித்தார்.  மேலும் தங்களது தவறை உணர்ந்து கொள்ளும் தைரியமும் பக்குவமும் யாருக்கும் இல்லை எனவும் கடுமையாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் லியோ திரைப்படத்தை பற்றி விமர்சனத்தை தான் முன் வைத்தார்  என்பதை அனைவராலும் அறிய முடிகிறது. விழா மேடையிலேயே தனது மகனின் படத்தை நேரடியாக விமர்சிக்கும்  எஸ்.ஏ சந்திரசேகரின் எதார்த்தத்தையும் அவரது நேர்மையையும் பலரும் பாராட்டினர்.