சினிமா Covid-19

குழந்தை முதல் பாட்டி வரை.. இப்படியொரு கஷ்டமா! பெரும் சோதனையில் இருந்து மீண்ட ஆடை பட இயக்குனர்!

Summary:

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில்

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மேயாத மான். இத்திரைப்படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ரத்னகுமார். அப்படத்தை தொடர்ந்து அவர் ஆடை படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்து பின்னர் நாளடைவில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் ரத்னகுமார் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வரும் நிலையில் பல பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இயக்குனர் ரத்னகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவர் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில், 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேறினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு என பதிவிட்டுள்ளார். 


Advertisement