பல ஆண்டுகளுக்கு முன் விஜய்யுடன் இருக்கும் இவர் இன்று பிரபல இயக்குனர்! அட! அவரா இது?

பல ஆண்டுகளுக்கு முன் விஜய்யுடன் இருக்கும் இவர் இன்று பிரபல இயக்குனர்! அட! அவரா இது?



director-rathnakumar-childhood-photo-with-actor-vijay

மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ரத்னகுமார் சிறுவயதில் தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வைபவ், ப்ரியா பவானி ஷங்கர், இந்துஜா ஆகியோர் நடிப்பில் உருவாகி, மாபெரும் வெற்றிபெற்ற மேயாத மான் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரபலமானவர் இயக்குனர் ரத்னகுமார். மேயாத மான் படத்திற்கு முன் சிறு சிறு குறும்படங்களை இயங்கிவந்த இவர் மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

master

ஜாலியான கதை, காமெடி என முதல் படத்தை கொடுத்த அவர், அடுத்த படம் அதிரடியாக இருக்கவேண்டும் என அமலாபாலை ஆடை இல்லாமல் நடிக்க வைத்து ஆடை என்ற புதுமையான திரைப்படத்தினை இயக்கினார். இப்படி வித்தியாசமான படங்களை இயக்கிவரும் இவர் அடுத்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திக்கொண்டிருக்கின்றனர்.

இவர் அடுத்ததாக பெரிய ஹீரோ யாரையாவது வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்த்தநிலையில் இவர் தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் திரைக்கதை எழுத்தாளராகா பணியாற்றியுள்ளார். இன்று மிகப்பெரிய இயக்குனராக இருக்கும் ரத்னகுமார் சிறுவயதில் இருந்தே தீவிர விஜய் ரசிகராம்.

master

பிரியமுடன் படத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்தபோது தனது குடும்பத்தினருடன் தனது சிறுவயதில் ரத்னகுமார் விஜய்யுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட, அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.

சிறுவயதில் விஜயின் ரசிகனாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரத்னகுமார், இன்று விஜய்யின் படத்திலையே வேலை பார்த்து வருவது பெருமைக்குரிய விஷயம் என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.

master